தார்சாலை அமைக்க பூமி பூஜை... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 July 2023

தார்சாலை அமைக்க பூமி பூஜை...

 


நம்பியூர் ஒன்றியம் எம்மாம்பூண்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் ,  கோபி அருகே உள்ள நம்பியூர் ஒன்றியம் ,  எம்மாம்பூண்டி ஊராட்சியில் 1.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிராமங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தொடங்கி வைத்தார்.

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எம்மாம்பூண்டி ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமப்புற சாலைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் அவற்றை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து அங்கு்ஆய்வு செய்த நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவருமான செந்தில்குமார் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், எம்மாம்பூண்டி மாரியம்மன் கோயில் கிழக்கில் இருந்து  மணியம்பாளையம் வரையிலும் புதிய தார்சாலை அமைக்க 67.27 லட்சம் ரூபாயும், எ.வரப்பாளையத்தில் இருந்து கொமாரபாளையம் வரை தார்சாலை அமைக்க 24.11 லட்சம் ரூபாயும், எம்மாம்பூண்டியில் இருந்து அழகம்பாளையம் வரை புதிய தார் சாலை அமைக்க 44.97 லட்சம் ரூபாயும், கொமராபாளையத்தில் இருந்து சின்னசெட்டிபாளையம் வரை தார்சாலை அமைக்க 27.51 லட்சம் ரூபாயும், கொமராபாளையம் காமாட்சி அம்மன் கோயில் வழி, முனியப்பன் கோயிலில் இருந்து ராயர்பாளையம் சோலைக்காடு வரை தார்சாலை அமைக்க 26.90 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து எம்மாண்பூண்டி ஊராட்சியில் 5 கிராமங்களிலும் புதிய தார்சாலை அமைக்கும் பணி நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் ப. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் 5 இடங்களிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சென்னிமலை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கீதாமுரளி, துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அல்லாபிச்சை, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுஜாதா ஜீவானந்தம்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பூர்ண சந்திரன், 8 வது வார்டு மேலவை பிரதிநிதி முகமது பாசில், இளைஞரணி ராஜ்குமார், காங்கிரஸ் கட்சி நம்பியூர் தெற்கு வட்டார தலைவர் ஜவஹர்பாபு, எம்மாம்பூண்டி ஊராட்சி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment