ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை Ex. IPS - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 July 2023

ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை Ex. IPS

 


பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு:


ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்




K.அண்ணாமலை Ex. IPS அவர்களை குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர்- குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்கள் சோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்

1.கிருஷ்ணகிரி மாவட்டம் புலியாண்டி பட்டி பகுதியைச் சார்ந்த 9-நபர்கள் 5-பெண்கள் 3-ஆண்கள், ஒரு 7- வயது ஆண் குழந்தை உட்பட தமிழ் குறவன் பட்டியல் இனத்தை சார்ந்த நபர்களை பொய் வழக்கில் ஆந்திரா மாநிலம் சித்தூர் நகர காவல்துறை சட்ட விரோதமாக பிடித்து சென்று, சித்தூர் காவல் நிலைய எல்லையில் வைத்து பெண்களை வன்புணர்வு செய்தும், பாலியல் சித்திரவதை செய்தும், பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும், இரும்பு கம்பியால் குத்தியும் மிக கொடூரமாக தாக்கிய, ஆந்திர மாநில காவல் துறையை பாரதிய ஜனதா கட்சி சார்பாக கண்டித்து பத்திரிக்கையின் வாயிலாக அறிக்கை வெளியிட வேண்டும்.


2.பாதிக்கப்பட்ட 7- நபர்களுக்கு உடனடியாக தல 25- லட்சம் ரூபாய் நிவரணமாக வழங்கிட தமிழ்நாடு அரசை  வலியுறுத்த வேண்டும்.


3.ஆந்திரா மாநிலம் சித்தூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அத்துமீறி நடந்த செயலுக்கு அவர்கள் மீது பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி (sc-st- PCR) வழக்குப்பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நிரந்தரமாக பணி நீக்கம் செய்திட வேண்டும்


4.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல உரிமை ஆணையம், ஆகியவற்றின் அதிகாரிகள் தலையிட்டு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் மாநகரப் பொறுப்பாளர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கொடுமுடி செய்தியாளர் பூபாலன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment