ஈரோட்டில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 October 2023

ஈரோட்டில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு;

 


ஈரோட்டில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு;

ஈரோட்டில் அற்புதமான மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். கணிதமேதை ராமனுஜம், பாசன தந்தை ஈஸ்வரன், எழுத்தாளர்கள், திரைத்துறையினர் வாழ்ந்த ஊர். பாரதியார் இறுதி உரை ஆற்றிய ஊர். ஒரு பக்கம் விவசாயம், தொழிற்சாலை, நெசவுத் தொழில் பின்னிப்பிணைந்த ஊர் ஈரோடு.

ஈரோட்டைப் பற்றி நன்கு அறிந்து பேசுகிறேன். சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலின் போது கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய வந்திருந்தேன். ஈரோடு நகரை ஸ்மார்ட் சிட்டி நகராக மாற்றுவதர்காக கடந்த 9 ஆண்டுகளில், மத்திய அரசு ரூ 1304 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ 1250 கோடிக்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் ரூ 224 கோடிக்கு பணிகள் நடந்து வருகிறது. ஆனால், ஈரோட்டை சுற்றிப்பார்த்தால் இது போன்ற பணிகள் நடந்ததாகத் தெரியவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கமிஷன் அடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. பெரும்பள்ளம் ஓடை, கனி ஜவுளிச்சந்தை என 54 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், ஈரோடு ஸ்மார்ட் சிட்டியாக இல்லை. மக்களை மேம்படுத்த பிர்தமர் மோடி நிதி கொடுத்தாலும், இங்குள்ள திமுக அரசு கடந்த 30 மாதமாக கமிஷன் அடிப்பதற்காக ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது. 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது முதல்வர், முதல்வர் மகன், அமைச்சர்கள் என அனைவரும் இங்கு முகாமிட்டு இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், தேனாறும், பாலாறும் ஈரோட்டில் ஓடும் என்று சொன்னார்கள். மத்திய அரசு கொடுத்த நிதியை திருடாமல் மக்களுக்கு கொடுத்தால், தேனாறும், பாலாறும் தானகவே ஓடும். 


ஈரோட்டில் எல்லா சாலைகளும் சேதமடைந்துள்ளது. ஒருகாலத்தில் நமது காவல்துறை உலகப் புகழ் பெற்றதாக இருந்தது. அதே அளவுக்கான திறன் வாய்ந்தவர்கள் இன்று அந்த துறையில் உள்ளனர். 



ஆனால், திமுக வந்தவுடன் அவர்களின் கைகளைக் கட்டி போட்டுவிட்டு வேலை செய்யச் சொன்னால் எப்படி வேலை செய்வார்கள்? ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசுமளவிற்கு இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.


அதற்கு ஆளூநர் மாளிகைக்கு வெளியில் தானே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என சென்னை மாநகர ஆணையர் பேட்டி கொடுக்கிறார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன ஒரு நபர், நேராக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசுகிறார். காவல்துறை பிடிக்கும்போது கூட இன்னொரு பெட்ரோல் குண்டை வீசுகிறார். கத்தி எடுத்து வெட்டினாலும் யாரும் சாகவில்லை என்பது போல் காவல் ஆணையர் சந்தோஷப்படுகிறார். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது.காவல்துறையின் தரத்தை திமுக அரசு தாழ்த்தியுள்ளது.


குறிப்பாக பெண்களுக்கு அச்சம் ஏற்படும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை திமுக சீர்குலைத்துள்ளது.


திமுக காரர்கள் நடத்தும் கட்டைப் பஞ்சாயத்திற்கு உடந்தையாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையின் மீதுதான் முதலில் கையை வைப்பார்கள். கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, தற்கொலைப்படை தீவிரவாதி, காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து இறந்தார். ஆனால் இது சிலிண்டர் விபத்து என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். 


தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. 


ஆனால், பல்லடம் அருகே ஒரு தோட்டத்தில் குடித்து விட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட குடும்பத்தினர் நான்கு பேரை கொலை  செய்தனர். குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொலையானவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணம் தருகிறார். இதுபோன்ற அநியாயம் இந்தியாவில் எங்கும் பார்த்தது இல்லை. அவ்வளவு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. 


கோவை கார் குண்டு வெடிப்பில் தேசிய புலானாய்வு முகவை 64 இடங்களில் சோதனை நடத்தி, 13 பேரைக் கைது செய்து, இரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆண்டவன் அருளால் பெரிய அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.  முதல்வர் சாக்கு, போக்கு காரணம் சொல்லி வருகிறார்.


பொய் சொல்வதில் வல்லவர் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். இதில் முக்கியமான 20 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல், 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகின்றார். 


நாங்கள் பெண்களுக்கு கொடுக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகையால் மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று திமுகவினர் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், பலருக்கும் இந்த தொகை கிடைக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குடும்பத்தலைவிகளாக 2.27 கோடி பேர் தமிழகத்தில் உள்ளனர். குடும்பத்தலைவிகளை ஆராய்ந்து வருவதாக முதலில் தெரிவித்தனர். 26 மாதம் ஆராய்ந்த பின் அமாவாசை நாளில் பணத்தை அனுப்பினார்கள். ஒருபுறம் சானாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசி வருகிறார். 


முதல்வர் அமாவாசையில் பணம் கொடுத்தால் நல்லது நடக்கும் என கொடுக்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.


இதுபோன்ற முதல்வர் வேண்டுமா என்ற கேள்விக்கு பொதுமக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் ஐந்து ஆண்டுகலில், 3.50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இன்று 30 மாதங்களில் 12 ஆயிரம் பேருக்கு கூட அரசு வேலை தரவில்லை. 


பிரதமர் மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு  வேலை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இன்று 6 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் உறுதியாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலையை அவர் வழங்குவார். 


ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிவிட்டு 10 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் போராட்டம்  நடத்துகின்றனர். 


அவர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆசிரியர்களின் வயது வரம்பை 56 என உயர்த்தி உள்ளனர். இன்னொருபுறம் செவிலியர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திமுகவின் பொய்யான வாக்குறுதியை எதிர்த்து ஒவ்வொரு புறமும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.


குடியரசு தினம், சுதந்திர தினத்திற்கு வித்தியாசம் தெரியாதவராக முதல்வர் உள்ளார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட திமுக அரசு  நிறைவேற்றவில்லை. 2014-ல் பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததும், ஏழைகளுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். வீடில்லாதவர்களுக்கு வீடு, இலவச எரிவாயு சிலிண்டர், கழிப்பறை வசதி, வீட்டிற்கே குடிநீர், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் என பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. மத்திய அரசின் திட்டப் பயனாளிகளை மாநில அரசு முடிவு செய்வதால், திமுகவினரே பயன்படுகின்றனர். மேலே இருந்து வரும் நிதி, சென்றடைவது தவறாவர்களுக்கு சென்றடைகிறது. தமிழக்த்தில் 67 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 


ஆனால் பல இடங்களில் இதில் முறைகேடு நடந்துள்ளது.


ஏழை மக்கள் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. இதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த பழனிவேல்ராஜன், மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளதாக சொன்னார். தாத்தா வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை, இவர்கள் ஒரு மாதத்தில் சம்பாதித்ததாக சொன்னார். அப்படிப்பட்ட ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.


இந்தியா பாதுகாப்பாக உள்ளது. நாட்டில் எங்கும் வெடிகுண்டு வெடிக்கவில்லை. இதற்கு நீங்கள் பாஜகவிற்கு வாக்களித்ததுதான் காரணம். 9 ஆண்டுகளில் 5 வது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகத்தின் முதன்மை நாடாக மாறும். லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி நடக்க நீங்கள் அளித்த வாக்குதான் காரணம்.


தனது தயார் மறைவிற்கு கூட 3 மணி நேரம் மட்டும் பிரதமர் மோடி சென்று வந்தார். உங்கள் வாக்கிற்கு அவர் கொடுத்த கவுரவம் அது. மத்திய அமைச்சர்கள் அனைவரும் சுத்தமாக இருக்கின்றனர். 


தமிழகத்தில் 38 திமுக கூட்டணி எம்பிக்கள் வெற்றி பெற்றும் ஒரு பயனும் இல்லை.  மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. நமது கலாச்சாரத்தை போற்றும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைத்த நிகழ்விற்கு கூட இந்த எம்பிக்கள் போகவில்லை. தமிழகத்திற்கு முதலீடு ஈட்ட வெளிநாடு சென்ற முதல்வர் ஸ்டாலின் ரூ 2000 கோடி முதலீடு பெற்றதாக தெரிவித்தார். அதே நேரத்தில் உபி முதல்வர் யோகி , தமிழகம் வந்து இங்கிருந்து 10 ஆயிரம் கோடி முதலீட்டை அவரது மாநிலத்திற்கு கொண்டு சென்று விட்டார். 


நெச்வாளர்கள், தொழில்துறையினர் மின்சார கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளன்ர். எல்லா தொழிற்சாலையும் மூடும் நிலைக்கு திமுக அரசு கொண்டு வந்து விட்டது. சோலார் மின்சாரத்திற்கும் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். தொழிற்சாலை நகரங்களான ஈரோடு, பெருந்துறை, திருப்பூரில் இருப்பவர்கள் எல்லாம், தொழிலை மூடிவிடாலாம் என்று நினைக்கும் அளவிற்கு வாட்டி வதைக்கின்றனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிக்க வீடு, வீடாகச் சென்று பணம், பட்டுபுடவை,  பரிசுப் பொருட்களை கொடுத்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்களை டர்ச்சர் செய்து ஓட்டு வாங்கினீர்கள். இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனை யாரும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அமைச்சர்கள் இடைத்தேர்தலின்போது வந்தார்கள். உதயநிதி இங்கேயே தங்குவேன் என்று சொன்னார்கள். ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயித்தபின், ஒரு அக்காவை என்ன சாரதா கலாராயிட்டே என்று கேட்கிறார். இவர்களுக்கு எல்லாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓட்டு போட்டு ஒரு பயனும் இல்லை.


இதேபோல், 2024ல் வாக்கு கேட்டு வருவார்கள். இது போன்ற அரசியல் நமக்கு வேண்டாம். பணம் கொடுத்து வாக்கு வாங்குவது, ஏழை மக்களை பரம ஏழையாக மாற்றுவதாகும். ஒருமுறை பணம் கொடுத்து விட்டால் 5 ஆண்டுகளுக்கு என்னை கேள்வி கேட்க முடியாது என்ற பண அரசியலை அவர்கள் நடத்திக் காட்டுவார்கள்.


தமிழகத்தில் அதிக புற்றுநோயாளிகள் உள்ள ஊர் ஈரோடு. திமுக தேர்தல் வாக்குறுதியில் புற்றுநோய் பிரிவு தொடங்குவோம் என்றனர். ஆனால், செய்யவில்லை. ஆனால், நீங்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற்றால், பல்நோக்கு புற்றுநோய் மருத்துவமனையை நாங்கள் ஈரோட்டில் அமைப்போம். நிலம், கார் எல்லாம் மாசு அடைந்து விட்டது.  அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, ஈரோடு உண்மையிலேயே ஸ்மார்ட் சிட்டியாக மாறும். 


விவசாயிகளுக்கு உற்ற துணைவானாக பிரதமர் மோடி உள்ளார். ஈரோடு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து ஈரோடு எம்பி செல்ல வேண்டும். 2024-ல் திமுக வாக்கு கேட்டு வந்தால், அவர்களை நீக்கள் ஊருக்குள் வர வேண்டாம் என பட்டியை போட்டு நீங்கள் அடைக்க வேண்டும்.  ஈரோட்டின் சந்தை, சாலைகளில் டெண்டர் எடுக்காமல் திமுகவினர் வசூல் செய்து கொண்டு இருக்கின்றனர். ஈரோடு மார்க்கெட்டை கட்டிவிட்டு இன்னும் திறக்கவில்லை. மாநகராட்சியில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன்ர்.


ஈரோடு அமைச்சர் முத்துசாமி மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. ஈரோட்டிற்கு பல திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். ஆனால், அவர் திமுகவில் சேர்ந்தபின், குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என்று முத்துசாமி சொல்கிறார். நல்லவர்களுக்கு திமுகவில் வேலை இல்லை. முத்துசாமி போன்றவர்கள் திமுகவிற்கு சென்றாலும் இதுதான் நடக்கும். இந்தியா தலைநிமிர்ந்து நிற்க உங்கள் வாக்கினை பாஜகவிற்கு அளிக்க வேண்டும் என்றார்.



செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment