ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியால் குடிபெயர்ந்து சென்ற இடத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 31 October 2023

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியால் குடிபெயர்ந்து சென்ற இடத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 


ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியால் குடிபெயர்ந்து சென்ற இடத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள இண்டியம்பாளையம் பகுதியில் கஸ்தூரி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிக்காக இண்டியம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கஸ்தூரி உட்பட 40 குடும்பங்கள், தட்டாம்புதூரில் நிலத்தை வாங்கி, அதில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் வீட்டுவரி ரசீது செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எடுக்காததால், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தங்களது பகுதிக்கு வீட்டுவரி ரசீது வழங்குவதோடு, குடிநீர், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


செய்தியாளர் ;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment