ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 18 வது பட்டமளிப்பு விழா ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 November 2023

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 18 வது பட்டமளிப்பு விழா ;


 ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 18 வது பட்டமளிப்பு விழா ;



ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 18. பட்டமளிப்பு விழா 26.11.2023 அன்று நடைபெற்றது. முதல்வர் முனைவர் எம்.ஜெயராமன் அவர்கள் கல்லூரியின் ஆண்டரறிகையை வாசித்தார். சிறப்பு விருந்தினர் உயர்திரு ஜி. கிரஹதுரை அவர்கள், வரம்பு செயல்பாடுகள், ISRO ஸ்ரீஹரிகோட்டா, இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 772 பட்டதாரிகளை வாழ்த்தி பட்டங்களை வழங்கினார், அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 48 மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில் கூறியதாவது:



வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை மாநில அளவில் முதல் 25 இடங்களில் ஒரு கல்லூரியாக பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக கூறினார். தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு சமூக வலைத்தளம் நண்பர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம் எராளமான வேலை வாய்புகள் கிடைகின்றன. அவர், பூமிக்கு வெளியில் செயற்கை கோள் அனுப்பும் முதல் மூன்று நாடுகளில் இந்தயா இடம்பெறும் என்று கூறினார். தற்போது தகவல் தொடர்பு புரட்சி மேலோங்குவதால் செயற்கைக்கோள்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து அதில் குழுவாக கடின உழைப்புடன் செயல்பட்டால் இந்தியா உலக அளவில் முன்னேற உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். ஒருவருடைய தொழில்முறை வாழ்க்கை சிறப்பாக இருந்தால் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.



விழாவிற்கு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. சி. ஜெயக்குமார், செயலாளர் மற்றும் தாளாளர் திரு.எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் திரு.பி.கே.பி.அருண், இணை செயலாளர் திரு நல்லசாமி, அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு. ராஜமாணிக்கம், திரு.குலசேகரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.ஜெயராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். புல முதல்வர், நிர்வாக மேலாளர் திரு என். பெரியசாமி, அனைத்து துறைதலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment