தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் நாடார் பிறந்தநாள் விழா, சேலம் நகரில் புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 November 2023

தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் நாடார் பிறந்தநாள் விழா, சேலம் நகரில் புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ;


 தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் நாடார் பிறந்தநாள் விழா, சேலம் நகரில் புதிதாக  திறக்கப்பட்ட  அலுவலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ;



சேலத்தில் புதிதாக  அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ராமஜெயம், கொங்கு மண்டல மகளிர் அணி தலைவி வரவேற்பு நிகழ்த்தினார். புதிய அலுவலகத்தை கொங்கு மண்டல திரு.பழனிசாமி நாடார் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து குத்து விளக்கு ஏற்றி திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார்.  அதன் பின் தலைவர் முத்துரமேஷ் நாடார் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அதனை தொடர்ந்து பனமரத்துப் பட்டியில் அமைந்துள்ள  நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிய, தலைவர் முத்துரமேஷ் நாடாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் S.கமலக்கண்ணன் நாடார்-சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சதீஸ் நாடார் துணைத் செயலாளர்| சேலம் மாவட்ட துணைசெயலாளர்,  பிரகாஷ் நாடார்  துணைத் தலைவர் நாமக்கல் மாவட்டம், இளைஞர் அணி தலைவர்,சின்னதுரை நாடார் மற்றும் சேலம் மாவட்ட, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதில் ஜே.குழந்தைராஜ் நாடார், மாவட்ட பொதுச்செயலாளர் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



தமிழக குரல் செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment