ஈரோட்டில் தூய்மை பணியாளர் பெண்ணை தகாத வார்த்தையால் இழிவு படுத்தி சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது அப்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார் ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 17 November 2023

ஈரோட்டில் தூய்மை பணியாளர் பெண்ணை தகாத வார்த்தையால் இழிவு படுத்தி சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது அப்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார் ;

 


ஈரோட்டில் தூய்மை பணியாளர்  பெண்ணை தகாத வார்த்தையால் இழிவு படுத்தி சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த  நபர்கள் மீது அப்பெண்  மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார் ;



ஈரோடு மாநகராட்சி 35 வது வார்டில் பார்வதி ராஜேந்திரன் என்பவர் நிரந்தர தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் இவருக்கு உதவியாக அவரது மகளாகிய தமிழரசி அவருடன் இணைந்து நான்கு சக்கர வாகனங்களில் வீட்டு குப்பைகளை தரம் பிரித்து  சேகரிக்கும் பணியை  செய்து வருகிறார் இந்நிலையில் ஈரோடு 35 வது வார்டு சார்பாக  வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதில் பணி சார்ந்த தகவலை   பதிவு செய்து வருகின்றனர் இக்குழுவில் அதிகாரிகள் மற்றும் வார்டில்  பணிபுரியக்கூடிய ஊழியர்கள் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இணைக்கப்பட்ட உள்ளனர் இந்நிலையில் இந்த பொது தளத்தில் 35ஆவது வார்டு சுய உதவி குழு தூய்மை பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் மாதேஸ்வரன் மற்றும் சுய உதவி குழு வாகன பிரிவு மேற்பார்வையாளர் யுவராஜ் ஆகியோர் தமிழரசி மற்றும் அவருடன் சேர்ந்து பணி செய்யும் பெண்களை தகாத வார்த்தையால் பேசி பொதுத்தளத்தில் பதிவு செய்துள்ளார் இதனால் மாநகராட்சி ஆணையரிடம் இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசி  முறையிட்டுள்ளார் இதை அறிந்த மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் ஆணையரிடம் கம்ப்ளைன்ட் செய்கிறாயா என்று சொல்லியும் இவரை தரை குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த தமிழரசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்டோருடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்



தமிழக குரல் செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment