கோபிச்செட்டிப்பாளையத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவீரன் குணாளன் நாடார் 268 வது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 January 2024

கோபிச்செட்டிப்பாளையத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவீரன் குணாளன் நாடார் 268 வது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 


கோபிச்செட்டிப்பாளையத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவீரன் குணாளன் நாடார் 268 வது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் , கோபிச்செட்டிப்பாளையத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்  பொதுக்குழு கூட்டம்   கோபிசெட்டிபாளையம்  நேகா ஸ்ரீ ஹாலில் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி ,  மாவட்ட பொருளாளர் சரவணன்  ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில்  தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் கவின் சங்கர் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.கே.டி. கோவிந்தசாமி ,  மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி  ஆகியோர் பொதுக்குழு தீர்மானத்தை வெளியிட்டார். முன்னதாக நிறுவனத் தலைவர் பேசிய போது முதலாம் சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் கொங்கு குணாளன் நாடார் அவருடைய வரலாறு மீட்டெடுத்து மணிமண்டபம் கட்டி சிலை அமைத்து அரசு விழாவாக கொண்டாட  வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்,  மற்றும் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு அவரால் துவக்கி வைக்கப்பட்ட  கோபி செட்டிபாளையம் நகராட்சி மேற்கு நுழைவாயில் தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது அதை மீண்டும் புதுப்பித்து கட்டி கோபுர வளைவிற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு கல்வெட்டு நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், மேலும் கொங்கு மண்டலத்தில் 50 லட்சத்துக்கு மேற்பட்ட நாடார் சமுதாய வாக்குகள் இருந்தும் இதுவரை எந்த ஒரு கட்சியும்  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக நாடார் சமுதாய வேட்பாளர்களை நிறுத்துவதில்லை தொடர்ந்து அரசியலில் கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தை புறக்கணிக்கப்படுகிறார்கள் இந்த முறை அதிகப்படியான நாடார் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி நாடார் சமுதாயத்துக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை  வைத்து தீர்மானம் நிறைவேற்றினார். பனை வாரிய உறுப்பினர்களின் விபத்து இழப்பீட்டு தொகையை அரசு உயர்த்தி தர வேண்டும். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மதுபானங்களை தடை செய்தும் .கள் விற்பனைக்கான தடையை நீக்கியும் உணவுப் பொருளான கள் விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய ஆலோசனையாக மாவீரன் கொங்கு குணாளன் நாடார் அவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தை ஐந்தாம் தேதி கோபியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கி 2024 ஆம் வருடத்திற்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களை சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நமது சங்கத்தின் பெயர் பலகையுடன் கொடியேற்று விழா நடத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்தார் அதனைத் தொடர்ந்து இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாக்க நிர்வாகிகளுக்கு  பனை விதைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தலைமை நிலைய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ,  மாநிலத் துணைச் செயலாளர் அய்யாசாமி , மாநில வர்த்தக அணி தலைவர் சோளி சந்திரசேகர் , மாநில நிர்வாகி ஸ்ரீதர் , மாநில விவசாய அணித் தலைவர். ராஜேந்திரன் , மாநில இளைஞரணி தலைவர் விக்னேஸ்வரன் , மாநில செயலாளர் வாசுதேவன் , மாநில உயர்மட்ட குழு ஆலோசகர்கள் முருகேஷ் ,  பரமசிவம் ,  செந்தில்குமார், எஸ்.எஸ்‌.எஸ். சுப்பிரமணியன் , மாநில வர்த்தக அணி, செயலாளர் லேண்ட் செந்தில் , மாநில துணை செயலாளர் இளங்கோ , மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணைத் தலைவர்கள், சரவண பிரபு ,ஹரி , துணைச் செயலாளர் கலைவாணன் , பிரவீன் குமார் , கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி ,  கொங்கு மண்டல மகளிர் அணி தலைவி  ஆர்த்தி,  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி , மாவட்ட செயலாளர் பெரியண்ணன் ,  ஈரோடு மேற்கு மாவட்டம் மாவட்ட நிர்வாகிகள் லட்சுமணகுட்டி  ,  கதிர்வேல் ,



தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சின்னசாமி ,  மகளிர் அணி தலைவி கோகிலா , ஈரோடு தெற்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ,  மாவட்ட பொருளாளர் செந்தில் , துணைத் தலைவர் அர்ஜுனன் , தகவல் தொழில்நுட்ப அணி சக்திவேல் , மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் நாகராஜ் ,  விவசாய அணி துணைச் செயலாளர் துரைசாமி , செந்தில்குமார் , திருப்பூர் வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் ரகுபதி , மாவட்ட பொருளாளர் பாலுசாமி , இளைஞர் அணி தலைவர் தீபன் ரகு , தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவக்குமார் ,  இளைஞர் அணி துணைச் செயலாளர் சக்திவேல் ,  கோபி ஒன்றிய தலைவர் ரங்கசாமி,  நம்பியூர் ஒன்றிய தலைவர் யுவராஜ் , ஈரோடு ஒன்றிய தலைவர் கேபிள் ஈஸ்வரன் , மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் பூபதி , சரவணன் ,  துணைத் தலைவர் வடிவேல் , இளைஞரணி சதீஷ் , இளைஞர் அணி துணைச் செயலாளர் விஜயன் , வர்த்தக அணி தலைவர் ஈஸ்வரன் , சென்னிமலை ஒன்றிய துணைத் தலைவர்கள் பெஸ்ட் சிவகுமார் ,ராசு , ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தசாமி ,  ஒன்றிய இளைஞரணி வடிவேல , சுந்தரம் , பெருந்துறை ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம் , நம்பியூர் ஒன்றிய பொருளாளர் சிதம்பரம் , எலத்தூர் பேரூராட்சி  இளைஞர் அணி  துணைச் செயலாளர் விஜயகுமார் ,கோபி ஒன்றிய நிர்வாகிகள் நாகர்பாளையம் அருள் ,மோகன்ராஜ் ,  இளைஞரணி கௌரி சங்கர் , கோபி நகரத் தலைவர் மணிகண்டன் , நகரத் துணைத் தலைவர் பாலு , மகளிர் அணி தலைவி அபிராமி, டி. என் . பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம் , ஆறுமுகம் குப்புசாமி,பிரகாஷ், , செந்தில்குமார், கெட்டிச்செவியூர் ஊராட்சி நிர்வாகிகள் அய்யாவு , ரங்கசாமி ,அய்யப்பன் ,விஜய் ,ஆனந்தன் ,சக்திவேல் , குப்புசாமி , மகளிர் அணி ஜோதிமணி மகேஸ்வரி,மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பினார்கள். விழாமுடியில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



 தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment