ஈரோடு மாநகராட்சி 14வது வார்டில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் விழிப்புணர்வு..
ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டை சேர்ந்த பாகம் எண் 65,66,67 பவானி மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், லட்சுமி நகர், அதியமான் நகர் ஆகிய பகுதிகளில் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிர் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் விடியல் பயண பேருந்து திட்டம், 28 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கும் நான் முதல்வன் திட்டம், 1339 கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு, அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் போன்ற சிறப்பம்சங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகளை மக்களிடையே 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புனிதா சக்திவேல், முன்னாள் மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், வட்டக் கழக செயலாளர் மாணிக்கம், வட்டக் கழக துணைச் செயலாளர் இஸ்மாயில், பிரதிநிதி முருகேஷ் மற்றும் பலர் இருந்தனர். திமுக அரசின் சாதனையை வலியுறுத்தி வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்கள் உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment