ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா - என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான மாவட்ட அளவிலான பரிசோதனை முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் அனைவருக்கும் கல்வி வட்டார வள மையத்திலும் வைத்து சிறப்பாக நடைபெறும் என தெரிவித்தனர். சென்னை எல்.ஜே நிறுவனம் குழந்தைகளின் காதுகளை பரிசோதிப்பதன் மூலம் செவித்திறன் அளவை நிர்ணயித்து உதவுகிறது. கொச்சி வீ-கார்டு நிறுவனம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குவதற்கான அனைத்து செலவுகளையும் தங்கள் சீ.எஸ்.ஆர் நிதியிலிருந்து வழங்குகிறார்கள். இந்த முகாமில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 80 குழந்தைகள் பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment