எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட அணிகளின் புதிய நிர்வாகிகள் தேர்வு! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 February 2024

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட அணிகளின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

 


எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட அணிகளின் புதிய நிர்வாகிகள் தேர்வு!



எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, மாவட்டசெயலாளர் அ.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ S.அப்துல் ரகுமான், பவானி தொகுதி தலைவர் H.முகமது ஜாபீர், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் M.சபீர் அகமது, செயலாளர் தளபதி K.S.பஷீர், ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் K.மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தகர்  அணியின் மாவட்ட தலைவராக மு.பக்ருதீன், மாவட்ட செயலாளராக ந.உமர் பாரூக், மாவட்ட துணைத்தலைவர்களா P.சாகுல் ஹமீது, J.சுலைமான் சேட், துணைச்செயலாளர்களாக ர.சபீர் அஹமது, M.ஒஜிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக A.பஜலுல் ரஹ்மான், M.சதாம் (எ) மியாக்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



இதே போல சமூக ஊடக அணியின் மாவட்ட தலைவராக நா.பைசல் அகமது, செயலாளராக F.தாஜுதீன், பொறியாளர் அணியின் மாவட்ட தலைவராக இன்ஜினியர் S.முகமது ஸஃப்வான், இன்ஜினியர் N.சுலைமான் சேட், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட தலைவராக மு.சபீனா, மாவட்ட பொதுச்செயலாளராக A.பர்க்கத்துன்னிஷா, மாவட்ட துணைத்தலைவராக A.பானு, மாவட்ட துணைச்செயலாளராக R.பௌஜியா பேகம், மாவட்ட பொருளாளராக M.பல்கீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக A.ஆயிஷா, J.பெனாசீர் பௌஷியா, M.ஷேக் ஷிபானா பர்வீன ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



 தமிழக குரல்  இணையதள செய்தியாளர்  கோபால், ஈரோடு....

No comments:

Post a Comment