வாணி புத்தூர் பகுதியில் பூங்கா அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் !!!
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணிபுத்தூரில் ரூ.25 இலட்சம் மதிப்பிலான பூங்கா அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே. சுப்பிரமணியம் ,தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், தூக்க நாயக்கன் பாளையம் ஒன்றிய அவைத் தலைவர் கருப்புசாமி , வாணிபுத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், வாணிபுத்தூர் பேரூர் செயலாளர் சேகர்(எ)பழனிச்சாமி, வார்டு உறுப்பினர்கள், பேரூர் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment