சிவகிரி பேரூராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் திறப்பு விழாவில் மொடக்குறிச்சி எம். எல். ஏ:
கொடுமுடி வட்டம், சிவகிரி பேரூராட்சிக்கு புதிதாக அமைக்கப்பட்ட சிவகிரி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் திறப்பு விழா சிவகிரி கரூர் வைசியா பேங்க் எதிரில் உள்ள நீர் உந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டார்.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 13.12 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 18.60 லட்சம் லிட்டர் தண்ணீர் வள்ளியம்பாளையம் அருகில் காவேரி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு காவேரி ஆற்றில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் உறிஞ்சும் கிணறுகள் மூலமாக நீர் எடுக்கப்பட்டு நீர் உந்து குழாய்கள் மூலம் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 21 மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்...
No comments:
Post a Comment