ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 February 2024

ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி!

 


ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி!


ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்ற முழக்கத்தோடு கடந்த ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கௌரவப்பு நிகழ்ச்சி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம்  தலைமையில் ஈரோடு பழக்கார தெரு ஹிதாயத் பஸ்ரியா மஹாலில் நடைபெற்றது. 


மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் மு.ஜமால்தீன், மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அகமது, மாவட்ட செயலாளர் க.முனாப், மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் சபீர் அஹமது, ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் T.அப்துல் ரகுமான், பவானி தொகுதி தலைவர் H.முகமது ஜாபீர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் S.அகமது நவவி மற்றும் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


நிகழ்ச்சியில் ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் தளபதி K.S. பசீர், துணைத் தலைவர் சுலைமான் சேட், செயற்குழு உறுப்பினர் பக்ருதீன், மேற்கு தொகுதி செயலாளர் மஸ்தான், இணைச் செயலாளர் ஜெமீஸ், பவானி தொகுதி செயலாளர் தர்வேஸ் மைதீன், துணைத்தலைவர் அய்யூப் அலி, இணைச்செயலாளர் லியாக்கத் அலி, பவானி நகர தலைவர் ம.முஹம்மது அகில், சமூக ஊடக அணியின் மாவட்ட தலைவர் நா.பைசல் அகமது, எஸ்.டி.டி.யயூ தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் தஸ்தகீர், துணைத்தலைவர் முகமது அலி, வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் மு.பக்ருதீன், துணைத் தலைவர் சுலைமான் சேட், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சபீனா செயலாளர் பர்கத்துன்னிஷா, பொருளாளர் பல்கீஸ், துணைச் செயலாளர் பௌஜியா பேகம் உள்ளிட்ட மாவட்ட, தொகுதி, வார்டு நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கட்சியின் செயல்வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


 தமிழககுரல் இணையதளம் செய்தியாளர் கோபால் ஈரோடு...

No comments:

Post a Comment