அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம் / அடிப்பாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் / துவக்கி வைத்தல் / நாட்டுக்கு அர்ப்பணித்தல் நிகழ்வினை காணொளி வாயிலாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி ஆர்.டி காலேஜ் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே நுழைவு பாலம் திறப்பு விழா சாவடிப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
திறப்பு விழா நிகழ்வில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி மற்றும் நமது கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் கொடுக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்வினை தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.
No comments:
Post a Comment