ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு:
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் ஈரோடு மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பேரூர் செயலாளர்கள் ஒன்றிய , பேருராட்சி தலைவர்கள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு
No comments:
Post a Comment