ஈரோடு அருகே வணக்கம் மூவர்ண கொடி அமைப்பின் தலைமை அலுவலகத்தை மாநிலத் தலைவர் டாக்டர்.பொன்சேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 12 February 2024

ஈரோடு அருகே வணக்கம் மூவர்ண கொடி அமைப்பின் தலைமை அலுவலகத்தை மாநிலத் தலைவர் டாக்டர்.பொன்சேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 


ஈரோடு அருகே  வணக்கம் மூவர்ண கொடி அமைப்பின் தலைமை அலுவலகத்தை  மாநிலத் தலைவர் டாக்டர்.பொன்சேகர்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டம் , சித்தோடு அருகே மாமரத்து பாளையத்தில் வணக்கம் மூவர்ண கொடி அமைப்பின் தலைமை அலுவலக திறப்பு விழா  நடைபெற்றது.


மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்த இவ்விழாவில் மாநிலச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.மேலும் இவ்விழாவில் மாநில தலைவர் மனிதநேயர் டாக்டர்.பொன்சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து வணக்கம் மூவர்ண கொடி அமைப்பின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி கௌரவித்தார்.அப்போது அவர் பேசுகையில், வணக்கம் மூவர்ண கொடி அமைப்பிற்கு அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்எனவும், நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.இவ்விழாவில் மாநில முதன்மை பொது செயலாளர் பாலாஜி, மாநில மகளிரணி பரிமளா, மாவட்ட பொதுச் செயலாளர் அருள், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி அமுதமலர், திருவண்ணாமலை பால்பாண்டி உட்பட மாவட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment