நம்பியூர் அருகே புது அய்யம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா !! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 12 February 2024

நம்பியூர் அருகே புது அய்யம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா !!


நம்பியூர் அருகே புது அய்யம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா !!ஈரோடு மாவட்டம் நம்பியூர்  அருகே புது அய்யம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி சார்பில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.அதை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வளர்ச்சி சமுக மேம்பாட்டு இயக்கம் சார்பில் பரிசு தொகை ரூ 2 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில்  விக்னேஷ் (எ) கோபிநாத் சசிகுமார், நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், நம்பியூர் அரிமா சங்க செயலாளர் மருதாசலம், நாராயணமூர்த்தி, வார்டு உறுப்பினர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் செய்து இருந்தனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment