500 மாணவர்கள் கலந்து கொண்ட மாநில கராத்தே போட்டி நடிகர் சிவா பரிசு வழங்கினார்...
ஈரோடு, கராத்தே டோ அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான கராத்தே, குமித்தே போட்டிகள் ஈரோடு செல்லாயம்மாள் மண்டபத்தில் நடந்தது .இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழல் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
இவைகளை சினிமா நடிகர் சிவா வழங்கிய வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பேசினார் .
கராத்தே டோ அசோசியேசன் மாநில தலைவர் நாவலன் விழாவுக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜா வரவேற்றார்.பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு திமுக நகர செயலாளர் மா சுப்பிரமணி ஈரோடு திணை மேயர் வீச செல்வராஜ் கராத்தே பயிற்சியாளர்கள் சக்திவேல்,சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு
No comments:
Post a Comment