மொடக்குறிச்சி ஆனந்தம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா....
மொடக்குறிச்சி வட்டம் ஆனந்தம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் R.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். தமிழ் தாய் வாழ்த்துடன் ஆண்டு விழா நிகழ்வுகள் துவங்கியது.பள்ளியின் தலைமை ஆசிரியை சி. தங்கமணி வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் இடைநிலை ஆசிரியை M. ஜோன்ஸ் ரெஜினா ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டு விழாவிற்கு மொடக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர் து.வனிதா ராணி , மொடக்குறிச்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் .ரா. சுதா, முன்னாள் மொடக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர் S. தமயந்தி சிவானந்தம் ,ஆலிஸ் ப்ளூ பைனான்சியல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன பொறுப்பாளர் S. கருணாமூர்த்தி, பள்ளியின் நில நன்கொடையாளர் A.R.நித்தியானந்தம், ஈஞ்சம்பள்ளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கைலாசம், எழுமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குனர் கொண்டப்பன் மொடக்குறிச்சி கிளை நூலகர் A.ரகுபதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தின் கனவு ஆசிரியரும் மன்னாதம்பாளையம் நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியருமான சு. இளஞ்செழியன் , பள்ளியின் முன்னாள் மாணவர் .V.K. செல்வம், பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற .க. கோவிந்தசுவாமி, கல்வியாளர் .A.P.கணபதி, பள்ளியின் தன்னார்வலர் K.M.மனோகரன் , வார்டு உறுப்பினர் .K.M.சிகமலை , மொடக்குறிச்சி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் இல்லம் தேடி கல்வி சி.செந்தில் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது.
34 வகை கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்தக் கல்வியாண்டில் ஆலிஸ் புளூ பைனான்ஸியல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நமது பள்ளிக்கு ₹116200 செலவில் ஆழ்துளைக்கிணறு அமைத்துத் தந்ததற்கு பள்ளியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் .V.K. செல்வம் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கினார். மொடக்குறிச்சி கிளை நூலகர் A.ரகுபதி பள்ளியின் 78 மாணவர்களுக்கும் இலவசமாக நூலக உறுப்பினராக பதிவு செய்ய உறுதி அளித்துள்ளார். கலைநிகழ்ச்சிகளை பள்ளியின் கணிதப்பட்டதாரி ஆசிரியர் ஆ.கிருஷ்ணமூர்த்தி , இடைநிலை ஆசிரியை ச.விஜயலெட்சுமி ஆகியோரும் தொகுத்து வழங்கினர். PTA ஆல் நியமிக்கப்பட்ட அறிவியல் ஆசிரியை தீபா அண்மையில் நடத்திய அறிவியல் கண்காட்சிக்கு நமது வட்டார வளமைய மேற்பார்வையாளர் .ரா.சுதா , வட்டாரக்கல்வி அலுவலர் து.வனிதாராணி பாராட்டு தெரிவித்தனர்.பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம்தேடிக்கல்வி தன்னார்வலர்களான சிவநந்தினி ,பொன்வனிதா,சங்கமித்ரா மற்றும் . ஜெயமணி ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெருந்திரளான பெற்றோர்களும் ஊர்ப்பொதுமக்களும் கலந்துகொண்டு ஆண்டு விழாவைச் சிறப்பித்தனர். பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் .ஈ.மு. நந்தகுமாரன் நன்றியுரை வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் ஆண்டு விழா இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment