ஈரோட்டில் பாஜகவினர் இந்திய அளவில் விளையாட தேர்வான வீரர்களுக்கு நிதி உதவி வழங்கினர்.
தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மிருதி, தங்கபாண்டி, பூமிகா ஆகியோர்கள் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகி பெங்களூருக்கு சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் பொருளாதாரப் பிரச்சினையில் சிரமத்தில் இருந்ததை அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் உத்தரவின்படி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவர் அக்னி ராஜேஷ் தலைமையில், அவரது ஈரோடு அலுவலகத்தில், திருப்பூர் சாய் கிருபா அறக்கட்டளையின் தலைவரும்,பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு கோவை வடக்கு மாவட்ட தலைவருமான டாக்டர்.சுதாகர் வீரர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, பாஜக தெற்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் சசிதயாள், மாவட்ட மேலிட பொறுப்பாளர் பிரபு சங்கர், கோட்டப் பொறுப்பாளரும் மாநில செயலாளருமான ராஜ்குமார், மாவட்ட துணைத்தலைவர் சின்னா ஆகியோர் உடன் இருந்தனர். நிதி உதவி பெற்றுக்கொண்ட வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்
No comments:
Post a Comment