ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவைசார்பாக அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 April 2024

ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவைசார்பாக அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா!

ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை
சார்பாக அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா!!!

ஈரோடு மாவட்டம் , 
  சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் ஈரோடு வடக்கு மாவட்ட அலுவலகத்தில்
அரசியலமைப்பின் தந்தை புரட்சியாளர்  அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழாவை அவரது புகைப்படத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி தலைமையில் 
மாலை அணிவித்து மரியாதை நிமிர்த்தம் செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சாதி ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரை சேரியின் தலைவராக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் டாக்டர் அம்பேத்கர் சிலைகள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்ற உறுதி ஏற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இரா.குருநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொ.குமுதா, 
மாவட்ட கொள்கை பரப்பு மகளிர் அணி செயலாளர் ப.சங்கரால் , மாவட்ட இளைஞர் அணி தலைவர் செ.வடிவேல், 
 சத்தியமங்கலம் 
 ஒன்றிய செயலாளர் மு.பசுபதி , 
 பவானிசாகர் 
 ஒன்றிய செயலாளர் சு.நஞ்சப்பன் , 
 நம்பியூர் 
 ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இரா.தங்கமணி , 
  நம்பியூர் 
ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பொ.பாலசுப்பிரமணி , 
 பவானிசாகர் 
ஒன்றிய பொறுப்பாளர் சு. செல்வன் 
மற்றும் மகளிர்
 அணி தோழர்கள்
கு. பொன்னி , 
ப.ரோஜா , 
வி. சாந்தா ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை நிமிர்த்தம் செய்தார்கள். 

தமிழக குரல் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment