வெள்ளோட்டில் பெண்ணிடம் தாலிக்கொடி பறிக்க முயன்ற வாலிபர் கைது: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 April 2024

வெள்ளோட்டில் பெண்ணிடம் தாலிக்கொடி பறிக்க முயன்ற வாலிபர் கைது:

 


வெள்ளோட்டில் பெண்ணிடம் தாலிக்கொடி பறிக்க முயன்ற வாலிபர் கைது:


ஈரோடு சென்னிமலை , வெள்ளோடு அருகே  ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ராசாத்தி ( 70 ) . இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அங்கு வந்த வாலிபர் , தான் தென்னை மரத்துக்கு மருந்து வைக்கும் வேலை பார்த்து வருவதாகவும் உங்கள் தென்னை மரங்களுக்கு மருந்து வைக்கிறேன் என கேட்டுள்ளார் . அதற்கு ராசாத்தி , நாங்கள் தென்னை மரத்துக்கு மருந்து எதுவும் வைக்கவில்லை என அங்கிருந்து அந்த வாலிபரை திருப்பி அனுப்பியுள்ளார் .


 பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு திரும்பி வந்த அந்த வாலிபர் ராசாத்தியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றுள்ளார் . அப்போது ராசாத்தி சத்தம் போட்டதால் அவருடைய மகன் முத்து சுப்பிரமணி ( 50 ) மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து , அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர் .அந்த வாலிபர் கடந்த 3 நாட்களாகவே அதே பகுதியில் நோட்டமிட்டுக் கொண்டு தென்னை மரத்துக்கு மருந்து வைக்கும் வேலை பார்ப்பதாக கூறி வந்ததாக தெரிகிறது . பின்னர் அந்த வாலிபரை வெள்ளோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர் . போலீசார் விசாரணையில் , அந்த வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் தாலுக்கா , கடியூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் பிரகாஷ் ( 24 ) என தெரியவந்தது . அதனைத்தொடர்ந்து பிரகாஷை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்   செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment