மொடக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் பரப்புரை:
ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளுடன் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஸ்பாபேட்டை ஊராட்சி முள்ளம்பரப்பு நால்ரோடு பகுதியில் தேர்தல் பரப்புரையை துவங்கினார். தேர்தல் பரப்புரையில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஸ்பாபேட்டை, துய்யம்பூந்துறை, கனகபுரம், அவல்பூந்துறை, ராட்டை சுற்றி பாளையம், அனுமன்பள்ளி, குடுமியான் பாளையம், பள்ளியூத்து, அரச்சலூர், மூலக்கடை, கத்தக் கொடிகாடு, அழகு கவுண்டன் வலசு, ஓலவலசு, வடபழனி, குமாரபாளையம்
கொல்லம் வலசு, தாண்டாம்பாளையம், கந்தசாமி பாளையம், மோளபாளையம், சடையப்பபுரம், ரங்கசமுத்திரம், மாரப்பம்பாளையம், சிவகிரி டவுன், அம்மன் கோவில் கைகாட்டி, வேட்டுவபாளையம் ஆகிய ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பா.ஜ.க ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் என்.பி பழனிச்சாமி, இணை அமைப்பாளர் எஸ். ஏ. சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் கே. ஆர். செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் வக்கீல் கார்த்திகேயன் ஆகியோருடன் பா.ஜ.க தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment