ரயில் மூலம் விற்பனைக்காக கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் !! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 May 2024

ரயில் மூலம் விற்பனைக்காக கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் !!




ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது . குறிப்பாக மிக எளிதாக மளிகை கடைகளிலும் கஞ்சா விற்பனை நடைபெறும் அளவுக்கு கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது . 


காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து விற்பனையானது அதிகரித்து தான் காணப்படுகிறது .ஈரோடு மதுவிலக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனைக்காக கடத்தப்படுவது குறித்து கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் டிஸ்பி . சண்முகம் தலைமையியிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் . சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த மனோஜ் குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பதும் ரயில் மூலம் 21 கிலோ கஞ்சாவை இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் பீகார் மாவட்டத்தைச் சேர்ந்த அமான்குமார் என்பவருக்கு அதே போல ஈரோடு மாவட்டம் , நாமக்கல் , உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது .


 இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக குரல் செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment