25 நாட்களில் 239 கடைகளில் 158 கிலோ மாம்பழம் பறிமுதல் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2024

25 நாட்களில் 239 கடைகளில் 158 கிலோ மாம்பழம் பறிமுதல் :



 ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவுப்படி , மாவட்ட அளவில் மாம்பழ குடோன் , மொத்த விற்பனை கடைகள் , சிறு விற்பனை கடைகளில் , ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர் . இதுபற்றி , உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது : மாவட்ட அளவில் கடந்த , 25 நாட்களில் , 239 கடைகள் , குடோன்களில் நடத்திய சோதனையில் , 16 கடைகளில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட , 158 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தோம் . இது தொடர்பாக , 16 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு , 16,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது . 


இது தவிர , 210 தர்பூசணி விற்பனை நிலையம் , கடை , மண்டிகளில் நடத்திய சோதனையில் , எட்டு கடைகளில் ரசாயன கலப்பு , அழுகிய பழங்கள் என , 53 கிலோ தர்பூசணி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது . இதுபோன்ற புகார்களை உணவு பாது காப்பு துறைக்கு , 94440-42322 என்ற வாட்ஸ் ஆப்பில் எண்ணில் மக்கள் அனுப்பலாம் . இவ்வாறு கூறினர் . 

தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment