ஈரோடு மாவட்டம் பர்கூர் தாளக்கரை சாலையின்பக்கவாட்டில் உள்ள மூங்கில் தூர்களை வனத்துறையினர் அகற்ற வேண்டும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது . இந்த மலைப்பகுதியில் உள்ள 33 கிராமங்களுக்கு செல்வதற்காக சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வாகன போக்குவரத்து , மினி பேருந்து , பிக்கப் வாகனங்கள் , சென்று வருகின்றன .
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாளக்கரை ரோடு பகுதியில் மூங்கில் தூர்கள் சாய்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாக மலைவாழ் மக்கள் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர் எனவே இந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை வனத்துறையினர் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment