ஈரோடு மாவட்டம் கோபி நகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாள் கொடியேற்று விழாvbமற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோபி நகர செயலாளரும், கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் கோபி நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு மிக்க இவ்விழாவில் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், என்.நல்லசிவம் கலந்து கொண்டு வார்டு எண்: 18,17,16,4,3,5,14,15,6,2,1,9,8,7,13 ஆகிய வார்டுகளில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி,வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில்மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி ,மாநில மகளிர் ஆலோசனைக் குழு உறுப்பினர் காயத்ரிசீனிவாசன் ,
ஈரோடு வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஏ.பெருமாள்சாமி,தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.புகழேந்தி , மாவட்ட இலக்கிய அணி முன்னாள் தலைவர் கோ.வெ.குமணன்,மாவட்ட பஞ்சாலை தொ.மு.ச. செயலாளர் கே.ஆர்.காளத்திநாதன் ,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.திருவேங்கடம் ,மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ஓ.என்.சுதாகர் மற்றும்மாநில,மாவட்ட,நகர, நிர்வாகிகள்,சிறப்பு அழைப்பாளர்கள்,நகர் மன்றஉறுப்பினர்கள்,வார்டு செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள்,கழக சார்பு அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள்,வாக்குச் சாவடி ஒருங்கிணைப்பாளர்கள்,வாக்குச் சாவடி நிலை முகவர்கள்,வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள்,கழக முன்னாள் நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment