உழவர் சந்தைகளில் 66.63 டன் காய்கறிகள் விற்பனை ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான 66.63 டன் காய்கறிகள் ரூ . 26.57 லட்சத்திற்கு விற்பனையானது . ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர் , பெரியார் நகர் , பெருந்துறை , கோபி , சத்தியமங்கலம் , தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது .
இந்நிலையில் , விடுமுறை தினமான நேற்று காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது . காய்கறிகளை வாங்கவும் அதிகாலை முதலே மக்களும் அதிகளவில் வந்திருந்தனர் . இதில் , சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 25.60 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ . 10 லட்சத்து 31 ஆயிரத்து 834 க்கும் , மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளுக்கும் வரத்தான 66. 63 டன் காய்க றிகள் மற்றும் பழங்கள் ரூ . 26 லட்சத்து 57 ஆயிரத்து 950 க்கும் விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment