ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி . ஜவகர் தெரிவித்தார் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் . ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி . ஜவகர் உத்தரவின்பேரில் மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து மதுவிலக்கு பிரிவு போலீஸார் மாநில மற்றும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர் .
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி . ஜவகர் கூறியதாவது : ஈரோடு மாவட்டத்தில் சாராயம் விற்பனை முழுமை யாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் சாராயம் தொடர்பாக புகார்கள் எழுந்ததோ அந்தப் பகுதிகளில் எல்லாம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன . டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது வாங்கி அதை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்றார் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment