ஈரோடு மரப்பாலம் வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் போலீ சார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் . அப்போது 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டு இருந்தது . உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் , அவர்கள் ஈரோடு மரப்பாலத்தை சேர்ந்த ஆனந்த் ( 39 ) , அதேபகுதியை சேர்ந்த அய்யப்பன் ( 43 ) , பெரியார்ந கரை சேர்ந்த ஆனந்த் ( 24 ) , அவரது அண்ணன் பாஸ்கரன் ( 29 ) , கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த ரவீந்தர் ( 38 ) , முனிசிபல் - சத்திரத்தை சேர்ந்த மாணிக்கம் ( 38 ) , மரப்பாலத்தை சேர்ந்த ஹபி புல்லா ( 26 ) ஆகியோர் என்பது தெரியவந்தது . இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment