வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி வியாபாரம் மந்தம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 27 June 2024

வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி வியாபாரம் மந்தம் :


வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வியாபாரம் மந்தம் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா , ஈஸ்வரன் கோவில் வீதி , திருவேங்கடசாமி வீதி . கனிமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளிச் சந்தை நடக்கிறது . பழைய சென்டிரல் தியேட்டர் பகுதி யில் திங்கட்கிழமை இரவில் சந்தை கூடுகிறது .


 இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து | ஜவுளி கடைகளை அமைக் கின்றனர் . இந்த வாரம் கூடிய சந் தைக்கு ஈரோடு , திருப்பூர் , கரூர் , நாமக்கல் , மதுரை உள் ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கடைகளை அமைத்து இருந்த னர் . ஆனால் பண்டிகை , முகூர்த்த நாட்கள் இல்லாத தால் ஜவுளி வியாபாரம் மந்த மாக இருந்ததாக வியாபாரி கள் தெரிவித்தனர் . இதுகுறித்து அவர்கள் கூறுகையில் , கர்நாடகா , கேரளா ஆகிய மாநில வியாபாரிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது . 


இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட் டது . அதேசமயம் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகு தியை சேர்ந்த பொதுமக்கள் வந்து ஜவுளியை வாங்கிசென் றனர் . எனவே சில்லரை விற் பனை பரவலாக காணப்பட் டது . ஆடிப்பெருக்கு சமயத் தில் ஜவுளி வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது " , என்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment