ஈரோடு தமிழ் உலகம் அன்னலக்ஷ்மி அன்னதான சேவை திட்டத்தை பாராட்டி டி. ராமலிங்கம் , மோகனப்ரியா மற்றும் கோகுல் ஸ்ரீவர்சன் ஆகியோருக்கு கோவை கவுண்டன்பாளையம் ஸ்ரீபாபா முதியோர் இல்ல நிறுவனர் கனகராஜ் கிருபா கனகராஜ் மற்றும் திருப்பூர் அவேர்னஸ் அப்பா ஆகியோர் இணைந்து அம்மா அறக்கட்டளையின் சார்பாக பசிதீர்த்தோர் விருது வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் அவேர்னஸ் அப்பா , தாகம் தணிக்க தண்ணீர் தாரீர் அமைப்பினர்,
சமூக ஆர்வலர் ஈரோடு சம்பத்நகர் ரவீந்திரன் ,
ஈரோடு விதைகள் குழுவின் களசேவையாளர் மோகனராம் ,
ஸ்ரீபாபா அறக்கட்டளையின் அறங்காவலர் சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment