சக்தி விநாயகர் கோவிலில் அரச , வேப்ப மரத்துக்கு திருமணம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

சக்தி விநாயகர் கோவிலில் அரச , வேப்ப மரத்துக்கு திருமணம் :



ஈரோடு , கைக்காட்டி வலசு வித்யாநகரில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது . இங்கு உலக நலன் , திருமணம் ஆகாதவர்க ளுக்கு திருமணம் நடைபெறவும் , குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கவும் வேண்டி அரச மரம் , வேம்பு மரங்களுக்கு திருமண பூஜை நேற்று நடந்தது . 


இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின . தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் , அரச - வேம்பு நாயகி அம்மன் திருமண பூஜையும் நடந்தது . சக்தி விநாயகர் கோவில் அர்ச்சகர் பாலாஜி பூஜைகளை நடத்தி வைத்தார் . இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் . சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment