ஈரோடு மாவட்டம் , நம்பியூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நம்பியூர் ஒன்றியம் பயிலும் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவுமற்றும் வங்கிக் கணக்கு துவங்குவதற்கு சிறப்பு முகாம் நாளை 10.6.2024 அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
மேலும் ஆதார் மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வுதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாகச் சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக நேரடிப் பயனாளர் பரிமாற்றம் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பொருட்டு 0-5 வயதுடைய குழந்தைகளுக்கு புதிய பதிவுகள் மேற்கொள்ளுதல், 5 முதல் 7 வயது வரை கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல், 15-17 வயது வரை பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் திருத்தங்களை எவ்விதக் கட்டணமின்றி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்முதற் கட்டமாக நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10.06.2024 திங்கள் கிழமை அன்று ஆதார் பதிவு சிறப்பு முகாம் தொடங்க உள்ளது. இந்நிகழ்வினை நம்பியூர் பேரூராட்சித்தலைவர் செந்தில்குமார் தலைமையேற்று தொடங்கிவைக்கிறார்.
முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெ. செல்வராஜ் வரவேற்புரை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெ. வேலுமணி, .வெ. ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆனந்தராஜ் வாழ்த்துரை வழங்க
உள்ளார்.
நிறைவாக அ. ஜெயப்பிரகாஷ் நாராயணன் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவு பெற உள்ளது. தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment