தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது . கூட்டத்தில் தாட்கோ மூலமாக தற்காலிக தூய்மை பணியாளரின் வாரிசுதாரருக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு நிதிஉதவியாக ரூ . 25 ஆயிரத்துக்கான காசோலையும் , 2 தூய்மை பணியாளர்களுக்கு மகப்பேறு நிதிஉதவியாக தலாரூ . 6 ஆயிரத்தஸுக்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர்ராஜகோபால் சுன்கரா வழங்கினார் .
பெருந்துறையில் உள்ள ஈரோடுமாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் ( எலைட் ) தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் தமிழகத்தில் எலைட் பள்ளிக்கூட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் எஸ் . உதயகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது . இதில் உதவி கலெக்டர் ( பயிற்சி ) ராமகிருஷ்ணசாமி , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( நிலம் ) பிரேமலதா , சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ராஜகோபால் , பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி தர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment