நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் திறந்து வைத்தார்!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 June 2024

நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் திறந்து வைத்தார்!!!




ஈரோடு மாவட்டம்,  நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தை திடல் அருகே சமுதாயக்கூடம் செயல்பட்டு வருகிறது.


இதில் கடந்த 12 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது இதனை அறிந்து நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் உரிய நடவடிக்கை எடுத்து இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் 15 லட்சம் செலவில் புதிதாக டைல்ஸ் வேலைகள் செய்யப்பட்டு புதுப்பிப்பு செய்யப்பட்டது அதன் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாயக் கூட்டத்தை திறந்து வைத்தார்.



 நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி இரா.நடராஜன்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன்.

வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் .


 தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment