ஈரோடு அரசு இசை பள்ளியில் ஓவியம் , சுடுமண் சிற்ப பயிற்சி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 June 2024

ஈரோடு அரசு இசை பள்ளியில் ஓவியம் , சுடுமண் சிற்ப பயிற்சி :


ஈரோடு பி.பி.அக்ரகாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசை பள்ளி யில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவியம் , சுடுமண் சிற்ப பயிற்சி முகாம் கடந்த 2 நாட்கள் நடந்தது . கோவை கலை பண் பாட்டுத்துறை உதவி இயக்குனர் சி.நீலமேகன் பயிற்சியை தொடங்கி வைத்தார் . இதில் சிற்ப கலைஞர் சக்திவேல் , ஓவிய கலைஞர்கள் சண்முகம் , ரமேஷ் , சுடுமண் கலைஞர் தர்மலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர் .


 முகாமில் 60 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர் . இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது . விழாவுக்கு அரசு இசை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிராஜ் தலைமை தாங்கினார் . விழாவில் மாவட்ட சுற்றுலா அதிகாரி பழனிசாமி கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் . இதில் ஈரோடு மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் கனகராஜ் , முன்னாள் செயலாளர் - குழந்தைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment