ஓட்டு எண்ணிக்கையால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

ஓட்டு எண்ணிக்கையால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம் :



ஈரோடு , லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால் , ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது . ஈரோடு , பன்னீர்செல்வம் பூங்கா பகு தியில் கனி மார்க்கெட் , அதனை ஒட்டிய டி . வி . எஸ் . , வீதி , ஈஸ்வரன் கோவில் வீதி , மணிக்கூண்டு சாலை பகுதிகள் , பனியன் மார்க்கெட்கள் போன்ற இடங் களில் நேற்று ஜவுளி சந்தை நடந்தது . வழக்கமான எண்ணிக்கையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் , விற்பனை குறைந்தே காணப்பட்டது .


 இதுபற்றி ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது : லோக்சபா தொகுதிக் கான ஓட்டு எண்ணிக்கை நடந்ததால் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் , பிற மாநிலங்களில் உள்ள ஜவுளி கடைக் காரர்கள் , வியாபாரிகள் குறைந்த எண் ணிக்கையிலேயே வந்தனர் . மக்களும் குறைவாகவே வந்திருந்தனர் . பள் ளிகள் திறக்க உள்ளதால் , அதற்கேற்ற ரெடிமேட் ஆடை , பனியன் , ஜட்டி , துண்டு , பெட்ஷீட் , லுங்கி , உள்ளா டைகள் போன்றவை விற்பனையா னது . பள்ளிகளுக்கான யூனிபார்ம் போன்ற சில்லறை விற்பனை மட்டும் ஓரளவு நடந்தது . மொத்த விற்பனை மிகவும் குறைந்தே காணப்பட்டது . இவ்வாறு கூறினர் . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment