ஈரோடு மாவட்டம்,
நம்பியூர் அருகே உள்ள பட்டிமணிக்காரன்பாளையம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பொலவபாளையம், கொளத்துப்பாளையம், எம்மாம்பூண்டி, வேமாண்டபாளையம், வரப்பாளையம், நம்பியூர் ஆகிய பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை நம்பியூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளியை மிஞ்சும் அளவில் ஸ்மாட் கிளாஸ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணிணி ஆய்வகம் ஆகியவை உள்ளதாலும் ஆங்கில வழியில் கற்றுத்தரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
2024 25 ஆம் கல்வி ஆண்டில் 6 வகுப்பில் சுமார் 95 மாணவர்களும் 11 வகுப்பில் சுமார் 85-க்கும் மேற்பட்ட மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
பள்ளி முதல் நாளில் கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகேசன் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கோடை விடுமுறை பின் இன்று பள்ளிகள் திறக்கபட்டுள்ளது.
இன்று பள்ளியில் புதிதாக இணையும் 6 மற்றும் 11 வகுப்பு மாணவர்களை உற்சாக படுத்தும் விதமாக பள்ளி நுழைவாயிலில் தமிழ் மரபு முறைப்படி நாதஸ்வரம் மேளதாளம் இசைத்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர்.
பள்ளியில் பயிலும் 700 மாணவர்களும் மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த மாதிரி பள்ளியில் மட்டும் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவவரும் செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ராஜாமணி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment