விசிக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

விசிக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:

M


 அந்தியூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் , கட்சி நிறுவனர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது . இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக . , சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட கட்சி நிறுவனர் முனைவர் தொல் . திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் , 40 தொகுதிகளை கூட்டணி கைப்பற்றியது மற்றும் திருப்பூர் தொகுதியில் சிபிஐ . , வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் , ஈரோடு மாவட்டம் , அந்தியூர் விசிக . , சார்பில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .


 ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த நிகழ்வில் , மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன் , துணை செயலாளர் ரமேஷ் , முருகேசன் , குருசாமி , அம்புரோஸ் , குமார் , வெங்கடேஷ் , ரங்கசாமி , ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . முன்னதாக , மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் , ஷாதிரா பேகம் , டேவிட் , நிஷாமா , குருசாமி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர் . இவர்களை மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் கட்சி துண்டு போர்த்தி வரவேற்றார் . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  வாசுதேவன், பவானி.

No comments:

Post a Comment