ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அந்தியூர் காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி கிரேஸ் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் குழந்தைகள் பாதுகாப்பு போக்கோ பற்றிய விழிப்புணர்வு கூறித்து அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பேபி முன்னிலையில் மாணவிகள் பதினெட்டு வயது நிறைவடையாமல் இருசக்கர , நான்கு சக்கர வாகனம் ஓட்டுதல் கூடாது, பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து செல்ல அறிவுறுத்த வேண்டும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது,பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்யகூடாது, சாலையை கடக்கும் போது சிக்னல் விளக்கை பார்த்து கவனமாக செல்லவேண்டும், அடையாளம் தெரியாத நபர்கள் உடன் பயணம் செய்யகூடாது, கைப் பேசி தவறான முறையில் பயன்படுத்த கூடாது, என்று அறிவுரை வழங்கினார்கள் .
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment