ஈரோட்டில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது . இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் . இதை தொடர்ந்து பெரியார் நகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரிந்த 10 க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சியினர் பிடித்தனர் . அவைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் வெளியே வீதியில் விட்டு விட்டதாக தெரிகிறது . ஆனால் , தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டும் போதாது அவற்றை வெளியே தெருக்களில் விடவே கூடாது என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment