பொதுமக்கள் பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 July 2024

பொதுமக்கள் பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் :



தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்து வருவதால் விரைவில் அணையின் முழு கொள்ளவு எட்டியவுடன் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து பொறுத்து காவிரியில் உபரி நீர் திறக்க இருப்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார் . அதன்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


உபரி நீர் திறந்துவிடும் போது கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாகவும் கால்நடைகள் , உடமைகளை பாதுகாத்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறது காவிரி ஆற்றில் கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் இளைஞர்கள் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் என உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையும் நீச்சல் அடிப்பதையும் மீன்பிடிப்பதையும் , கால்நடைகள் குளிப்பாட்டுதையும் , முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது . வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளாட்சித் துறை காவல்துறை என அனைத்து துறை சார்பிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment