அரசு பொது மக்களுக்கு உடனடி பொது சேவை செய்யும் பொருட்டு மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பழமங்கலம், குலவிளக்கு, காகம், விளக்கேத்தி ஆகிய கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களின் மனுக்களை நேரடியாக பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் குலவிளக்கு, கணக்கம்பாளையம், பச்சியம்மன் சமுதாய கூடத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி துவக்கி வைத்தார் .
முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment