காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி, காரணம்பாளையம் நீர்பிடிப்பு பகுதி, கொடுமுடி இலுப்பு தோப்பு ஆகிய பகுதிகளை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறைகளான வருவாய்த்துறை, பேரிடர் மீட்புத்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மேலும் காவேரி ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவசரகால செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து மக்களை வெள்ளநீர் அபாயத்திலிருந்து காக்க வேண்டி உத்தரவிட்டார்.
நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளான மாவட்ட ஓ.பி.சி அணி பொதுச் செயலாளர் அருள்ஜோதி, கொடுமுடி கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் எம்.அருண், காளியப்பன், வெள்ளோட்டம்பரப்பு பேரூர் தலைவர் சதாசிவம், பேரன்பாடி செயலாளர் மின்னல் நாகராஜ், ஒன்றிய மகளிர் அணி மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக
பூபாலன் ஈரோடு மாவட்டம்
No comments:
Post a Comment