கடந்த 29.4.2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்து வந்த 18 சதவீத இட ஒதுக்கீட்டை அதில் ஒரு பிரிவாக இருக்கும் அருந்ததியர் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு இச் சமூகத்தில் முன்னேற்றம் அடைய 3% உள் இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
அதனை பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் நாடு முழுவதும் கூட அதை ஏற்க மறுத்தனர் ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் வரதராஜன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் தோழர் அதியமான் இந்த அரசாணையை பிறப்பிக்க உறுதுணையாக இருந்தனர்
இதே சமூக நீதிக்காக 1994 இல் வந்தது தான் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் அதில் முக்கியமாக 9வது அட்டவணை பாதுகாப்பை பெற்றது
அதன் அடிப்படையில் இந்த 3% சதவீத இட ஒதுக்கீட்டை யாராலும் தடுக்க முடியவில்லை மற்றொன்று இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு சட்ட வடிவமாக (ACT )இருப்பது தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களில் வெறும் ஆணைகளாக (G.O) தான் உள்ளன 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டாதல் நீதிமன்றங்கள், மத்திய அரசு என யாரும் இதில் தலையிட முடியாது என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது ஆகவே அக்கருத்தை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து சட்டரீதியாகவும் சட்டமன்றத்திலும் முன் வடிவை தாக்கல் செய்த திமுகவின் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சர் தோழர் மு க ஸ்டாலின் க்கு திராவிடர் புரட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஈவேரா சௌந்தர் ,மாநில நிதிச் செயலாளர், நஞ்சனாபுரம் வேலு ,தலைமை நிலைய செயலாளர் சதீஷ்சமரன் ,ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் சே.மே.மரியதாஸ்
தெற்கு மாவட்ட செயலாளர் சகாயபுரம் பிரபு ஆகியோர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று நன்றியை தெரிவித்தனர்..
No comments:
Post a Comment