நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . இதில் , ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது . இதில் , ஈரோடு சம்பத் நகர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் , சூரம்பட்டி நால் ரோடு அருகே உள்ள வலம்புரி செல்வ விநாயகரல் , மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் , முனிசிபல் காலனியில் உள்ள சக்தி விநாயகர் ஆகிய கோவில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடந்தது .
இதில் , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு , சிறப்பு அலங்காரத்தில் இருந்த விநாயகரை வழிபட்டு சென்றனர் . விநாயகர் சதுர்த்தியையொட்டி , பொதுமக்கள் தங்களது வீடுகளில் பூஜை அறையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து , அருகம்புல் , தேங்காய் , பழம் வைத்தும் , கொளுக்கட்டை , சுண்டல் படைத்தும் வழிபட்டனர் . ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 10 ம் தேதி ( செவ்வாய் ) ஊர்வலமாக எடுத்து சென்று ஈரோடு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது . இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வருகிற 13 ம் தேதி வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு , மாவட்ட நிர்வாகம் அனுமதித்த 48 இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment