பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியம் சார்பாக கஸ்பாபேட்டை ஊராட்சி முள்ளாம்பரப்பில் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் , ஒன்றிய குழு துணை தலைவர், மயில் (எ ) சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே வி
இராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி. பி.
சிவசுப்பிரமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழக பேச்சாளர்கள் மாவட்ட கழக,ஒன்றிய கழக,பேரூர் கழக மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள்,வார்டு பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மயில் (எ) சுப்ரமணி தெரிவித்துக் கொண்டார்.
தமிழக குரல் செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment