குப்பையில் தவறவிட்ட வைரத் தோட்டை மீட்ட துப்புரவு பணியாளர் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

குப்பையில் தவறவிட்ட வைரத் தோட்டை மீட்ட துப்புரவு பணியாளர்



ஈரோட்டில் நகைக் கடையினர் குப்பையில் தவிர விட்ட ஒரு ஜோடி வைர தோட்டினை குப்பை கிடங்கில் தேடி கடையின் உரிமையாளரிடம் ஒப்படைத்து ஈரோடு மாநகராட்சிக்கு பெருமை சேர்த்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன . ஈரோட்டில் நகைகடை வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் உரிமையாளர் ராஜா என்பவர் நகை இருப்பு குறித்து ஆய்வு செய்த போது ஒரு ஜோடி வைரத்தோடு கணக்கில் வராதது தெரியவந்தது .


 மாநகராட்சி ஊழியர்கள் கடையில் சேகரித்து சென்ற குப்பையில் வைரத்தோடு தவறி விழுந்தருக்கக் கூடும் என ஊழியர்கள் கருதிய நிலையில் அந்த பகுதியின் சுகாதார ஆய்வாளர் நல்லசாமியின் அறிவுரையின்படி இரவில் வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கடை வீதியில் சேகரித்து வந்த குப்பைகளில் வைரத்தோடை தேடும் பணி நடைபெற்றது . இதில் குப்பையோடு குப்பையாக இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள நகையினை ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டலம் , 42 - வது வார்டு தூய்மை மேற்பார்வையாளர் விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்ட நகைக்கடையில் ஒப்படைத்தார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment